அலாதீன் : வானில் புது உலகம்
கண்கள் குளிர காண்போம்
எந்தன் கூட இணைந்தே பறந்தே
புதுமை கானவா
கண்ணை திறந்து நீ பார்
தோன்றும் விந்தை மிக விந்தை
வானமெங்கும் விரைந்தே செல்வோம் மந்திர விரிப்பிலே
உலா போவோம்
மழை மேகம் உலாவுதே
யாராலும் தடையில்லை என் ராணியே
கனவில்லை இக்காட்சியே
ஜாஸ்மின் : உலா போவோம்
கண் கூசும் ஜோதியாகவே
வான் மீனும் தோன்றுதே
எழில் ஓவியம்
ஒன்றாக சேர்ந்தே உலா போவோம் நாமே
அலாதீன் : ஒன்றாக சேர்ந்தே உலா போவோம் நாமே
ஜாஸ்மின் : என்ன வென்று சொல்வேன்
அழகின் அற்புத கோலம்
வைரம் போல ஜ்வொளிக்கும் வானில்
பறந்தே நாமே
உலா போவோம்
அலாதீன் : திறந்திடு கண்களை
ஜாஸ்மின் : ஓராயிரம் கோடி காட்சிகள்
அலாதீன் : இதற்கில்லை எல்லை
ஜாஸ்மின் : விண்மீனை போலவே
பறந்த நாம்
விரும்புவதிர்ப்பது இல்லையே
அலாதீன் : உலா போவோம்
ஜாஸ்மின் : திசை எல்லாம் என்னை அறைக்குதே
அலாதீன் : விழா கோலம் என் மீதிலே
ஜாஸ்மின் : எங்கும் கொண்டாட்டமே
அலாதீன் & ஜாஸ்மின் : என்றும் நம் ஒன்றாக
இன்பம் தரும்
பயணம் தொடர்வோம் விண்வெளி பாதையிலே
அலாதீன் : உலா போவோம்
ஜாஸ்மின் : உலா போவோம்
அலாதீன் : உன்னோடு நான்
ஜாஸ்மின் : என்னோடு நீ
அலாதீன் : மேகம் போலெ
ஜாஸ்மின் : செல்வோம் மேலே
அலாதீன் & ஜாஸ்மின் : என்றும் நாமே