ஏரியல், ஏன் அமைதியா இருக்க?
அப்பா ஏன் என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்கராரு. மனிதர்கள அவர் ரொம்ப தப்பா அவர் புரிஞ்சு வச்சுருக்காரு. அற்புதமான அழகான பொருட்கள உருவாக்கர மனிதர்கள் நிச்சயமா கெட்டவங்களா இருக்கவே முடியாது.
அற்புதமே பொக்கிஷமே, அதிசய பொருட்கள் இது போதுமே, யாரிடமும் இல்லாததே அது என்னிடம் உள்ளதே, ஜொலிக்கின்றதோர் புதையலை பார், இதை விட அதிசயம் வேரெதுவோ, பார்த்ததும் சொல்வாயே, இவள் அதிர்ஷ்டசாலியே, பல விதமான பொருட்களின் குண்டு, தங்க வைர புதையலுண்டு.
இது உனக்கு வேனுமா? எங்கிட்ட நிறையா இருக்கு
இவை எல்லாம் பெரிதில்லை என் கனவே, மனிதருடன் வாழ ஆசை, நாட்டியங்கள் ஆடிப் பார்க்க வேண்டும், அதை கொண்டு நடக்க வேண்டும்.
அதுக்கு என்ன பேரு? ஓ கால்கள்
இறகை வைத்து இனி நீந்த மனமில்லை, கால்கள் தேவை குதிக்க, ஓடி ஆட வேண்டும் அந்த,
அதுக்கு என்ன பேரு? ஆ தெருவில் ஆடுகின்ற ஓடுகின்ற <வீரத்தோடு> அவர் வாழுகின்றார், அவர் உலகிலே வாழ்வது தான் என் ஆசையே, எதையும் தருவேன் கடலை விட்டு தரையில் வாழ, எதையும் செய்வேன் மனல் மீதிலே நான் நடக்கவே, அன்புக்கு அங்கே பஞ்சமில்லை, கண்டிப்பு நிச்சயம் அங்கில்லை, நீந்த வேண்டாம், நடக்க வேண்டும் மனிதர் போலே, மனிதர் அறிந்ததை கற்க வேண்டுமே, கேள்விகள் கேட்டபடி வைத்திருவேன், இருக்கும் என்ன அதே, என்ன வார்த்தை எரியுது, என் ஆசையே நிறைவேறுமா, தரை மீது நான் வாழும் நாள் வருமா? கடலை விட்டு மனிதர் போலே நான் வாழ வேண்டுமே