கடல் வானத்தைத் தொடும் இடமே
அழைக்கின்றதே
கடல் ஆழத்தை யார் அறிவாரோ?
என் உறவுகள் விடைதர செல்கின்றேன்
நானே
தன்னந்தனியே விடை காணவே!
நான் தேடியதே
நல்ல பாதையிதே
என் பயணமிதே
அது தொடங்கியதே
பின் வாங்குவதே
இனி முடியாதே
தோல்வி கிடையாதே
கடல் நீரினை ஒளியாக்கி
அழைக்கிறாள்
செல்வேனே நான்
வெல்வேனே
நிலவொளியில் காற்றலையில் நான்
செல்வேனே
நான் அறிவேனே
செல்லும் தூரமே!